வரம் தரும் வாரணன்

 வரம் தருவாய் வாரணனே !

 ராகம்:ஹம்ஸத்வனி


வரம் தருவாய் வாரணனே!

வலம்புரி விநாயகனே - எனக்கொரு                         (வரம்)


உலகம் புரந்திடும் உமையாள் மகனே

உருவான பிரணவத்தில் உறைபவனே 

திருவான வேதங்கள் தொழுதிடும் தேவனே 

திருமால் மருகனே திவ்ய சொரூபனே             ‌        (வரம்)  


ஆணவம் கன்மம் மாயைகள் அழிப்பாய் 

அருட்கடல் தனிலே எமைமூழ் கடிப்பாய் 

அன்பெனும் உருவே அருள்தரும் சுடரே 

ஆதியும் அந்தமும் இல்லாப் பொருளே

         அகம் குழைந்துன் பதம்நினைந்திடும் 

         கணந்தனில் கண் மலர் மலர்ந்திடும்

        அறம் வளர்த்திடும் திறம் கொடுத்திடும் 

        அழகிய திருக்கரம் அனைத் தெடுத்திடும்        (வரம்)



கி.பாலாஜி

1999

Comments

Popular posts from this blog

கணபதி கானங்கள்