கணபதி கானங்கள்
01 க்ஷிப்ரப்ரஸாத கணபதி
ராகம் : ஆபோகி
க்ஷிப்ரப்ரஸாத கணபதி
தினம் பணிந்தேன் உந்தன் திருவடி
திருவிழி மலர்கள் திறந்திட இன்னும்
தாமதமேனோ அருள்புரி........(க்ஷிப்ர)
ஓமெனும் ப்ரணவத்துள் உறைபவனே
உயிரினம் தழைத்திட ஒளி தருபவனே
கரிமுகவதனா கருணாநிதியே
கந்தனின் தமையா கலியுகபதியே
....(க்ஷிப்ர)
ஈரேழுலகும் இசைவடிவாக
இன்னிசைதனிலே நீயுருவாக
நர்த்தனமாடி நல்லவை சேர்க்க
நாட்டிய கணபதி தாள் பணிந்தேனே
....(க்ஷிப்ர)
02 வரம் தருவாய் வாரணனே !
(ராகம்:ஹம்ஸத்வனி)
வரம் தருவாய் வாரணனே!
வலம்புரி விநாயகனே - எனக்கொரு
(வரம்)
உலகம் புரந்திடும் உமையாள் மகனே
உருவான பிரணவத்தில் உறைபவனே
திருவான வேதங்கள் தொழுதிடும் தேவனே
திருமால் மருகனே திவ்ய சொரூபனே
(வரம்)
ஆணவம் கன்மம் மாயைகள் அழிப்பாய்
அருட்கடல் தனிலே எமைமூழ் கடிப்பாய்
அன்பெனும் உருவே அருள்தரும் சுடரே
ஆதியும் அந்தமும் இல்லாப் பொருளே
அகம் குழைந்துன் பதம்நினைந்திடும்
கணந்தனில் கண் மலர் மலர்ந்திடும்
அறம் வளர்த்திடும் திறம் கொடுத்திடும்
அழகிய திருக்கரம் அனைத் தெடுத்திடும்
(வரம்)
கி.பாலாஜி 1993
3 கஜமுகனை வேண்டினேன்
ராகம்:ஹம்ஸத்வனி
கஜமுகனை வேண்டினேன்
கணம் கணம் நினைந்துருகும்
மனங்களில் நிலைத்தருளும் (கஜமுகனை)
முன்னைப்பழம் பொருளோன் மூவுலகாதாரன்
முறைகளைக் கேட்டருளி வரம்தரு மோர்சீலன்
மூவரும் யாவருமே முதல்நினை சிவபாலன்
முனிவர்கள் தொழும் வேதம் வணங்கிடும்குரு நாதன்
(கஜமுகனை)
இனிமைக்கு மறுபெயரோன் இகபரசுகம்தரு வோன்
ஈடிணை இல்லாதோன் எங்கெங்கும் நிறைந்திடுவோன்
தங்கு தடையின்றி மங்களங்கள் அருள்வோன்
தாமரை மல்ர்க் கழல்கள் சரண்புகுந் தேன்நானும்
(கஜமுகனை)
4 மணக்குள விநாயகனே
ராகம் : ஆபோகி
மணக்குள விநாயகனே
மனத்துள் நீ நாயகனே
மந்திரப் பொருளோனே
மங்களம்அருள்வோனே
(மணக்குள)
எருக்கம் பூவிற்கும் ஏற்றம் தந்தாய்
எதிர்ப் படுவோர்க்குத் துணிவைத் தந்தாய்
சூட்டிய மாலையில் சுடரொளித் தோனே
சுந்தரன் மகனே சுகம் தருவோனே
(மணக்குள)
செம்மலர்ப் பதம்நாடி வந்தனை புரிந்தே
வந்துனைத் துதிப்போர்க்கு வாழ்வளிப் பவனே
இம்மெனும் முன்னே ஈந்தனை வரம்நீ
இகபரம் இரண்டுக்கும் இனியொரு துணைநீ
(மணக்குள)
கி.பாலாஜி 25.10.1999 இரவு 11 மணி
5 காணும் இடமெங்கும் கணபதியே..
ராகம் : ஹம்ஸாநந்தி
காணும் இடமெங்கும் கணபதியே
கைகூப்பித் தொழுவோர்க்கு
அருள்தரும் நவநிதியே
(காணும்)
அடைக்கலம் தருகின்ற அன்புக் கரமொன்று
அழகிய மறுகரத்தில் மோதக மும் உண்டு
சிற்றெலி தனிலூர்ந்தே சிந்தை மகிழ்விக்கும்
வல்லப கணபதியை வந்தனம் செய்வோமே
(காணும்)
ஒரு முறை நினைத்தாலே ஒருபதம் முன்வைப்பான்
ஓங்காரப் பொருளாமே உச்சிதனில் உறைவோன்
என்றென்றும் அவளருளை ஏற்றுப் பயன்பெறுவோம்
எங்கெங்கும் நிறைந்தோனை ஏற்றிப் பாடிடுவோம்
(காணும்)
கி.பாலாஜி
13.09.2018
விநாயக சதுர்த்தி தினம்
6 ஆனை முகத்தோனே
ராகம்: பாகேஸ்ரீ
ஆனை முகத்தோனே அறுமுகன் தமையனே
அண்டிடும் அடியார்க்கு அருள் தரும் அழகனே
(ஆனை)
அஞ்சுதல் அகற்றி ஆறுதல் அளிப்பாய்
ஆற்றிடும் செயல்களில் வெற்றியை அருள்வாய்
இகபரசுகம் ஈந்து எமைக்காத் திடுவாய்
ஈந்திடும் அறத்தைச் செயும்பே றளிப்பாய்
(ஆனை)
உண்மையை உணர்த்தி உய்ந்திடச் செய்வாய்
ஊறுகள் அகற்றும் உன் பதம் சரணம்
எந்தையே என்றும் ஏற்றம் அளிப்பாய்
ஐயங்கள் அகற்றி அறிவொளி தருவாய்
(ஆனை)
ஒப்புதல் இல்லா ஓங்காரத் துறைவோய்
உன்னடி பணிந்தோம் ஔடதப் பொருளே
இந்திரன் முதலா தேவரும் வணங்கும்
இன்னுரு வேயுனை என்றும் துதிப்போம்
(ஆனை)
கி. பாலாஜி
04.09.2019
7 வலஞ்சுழியோன் துணை
ராகம் :ஹம்ஸத்வனி
குழந்தை மனமுடைய செழுங்கன்றே
கோதொன்றும் இல்லாத குணக்குன்றே
தீதொன்றும் சூழாமல் துணைநின்றே
பாதமலர் காட்டியருள், பரவுகின்றேன்
(குழந்தை)
வாதும் சூதுமெலாம் எனை அணுகா
வழியைக் காட்டிடுவாய் வலஞ்சுழியோய்
வாழ்வின் பாதையிலே நீ என்றும்
வழித் துணை யாய்நின்றே நலமீவாய்
(குழந்தை)
போதும் எனும்மனமே பொன்னாகும்
போதா திருப்பது உன் நினைவாகும்
ஏதும் குறைகள் நான் செய்தாலும்
ஏற்றே அருள்புரியும் கணநாதா
(குழந்தை)
எல்லாம் நின்னருளே என்றிருந்தேன்
எங்கும் நிறைகின்றாய் என்றுணர்ந்தேன்
என்றும் மலரடியே மனம் தன்னில்
பொன்றா திருந்திடவே புரிவாயே
(குழந்தை)
கி. பாலாஜி
24.03.2022
காலை 9 மணி
8 கண்மூடி அமர்ந்தாலும்..
ராகம் : ஹம்ஸத்வனி
கண்மூடி அமர்ந்தாலும்
கண்ணுக்குள் ஒளியாகும்
கற்பகத்தருவே நீ
கணபதியே
(கண்மூடி)
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விரிந்தபே ரண்டத்திற்கும்
முன்னின்ற பொருளாகும்
மூலவி நாயக னே
எண்ணத்தின் அணுவாகி
ஏற்றங்கள் தருவாயே
என் றென்றும் உனைப் போற்றும்
உள்ளத்தை அருள்வாயே
(கண்மூடி)
ஓங்காரப் பொருளாகும்
உன்னதத் தலைவன் நீ
உன்னடி யேசரணம்
உய்வித்து அருள்வாயே
எல்லா உயிர்க ளிலும்
நிறைந் தருள்புரி பவனே
ஏழ்பிறப் பிலுமுன்னை
மறவா திருப்பேனோ
(கண்மூடி)
கி.பாலாஜி
21.08.2020
வலம்புரி கணபதி
வலம் புரி கணபதி நலம்புரி குலபதி
வந்தனை புரிந்தோம் வரமருள் வானே
(வலம்புரி)
வல்லப கணபதி வாதாபி கணபதி
சொல்லருள் கணபதி சுந்தர கணபதி
சுகமருள் சிவசுதன் சுரபதி யவனே
சூடிய வெருக்கின் மாலையில் ஒளிர்வோன்
(வலம்புரி)
எள்ளத் தனையும் குறைகள் இன்றி
ஏற்றங்கள் அருளும் ஏக தந்தன்
கள்ளம் கவடெதும் இல்லாக் குழந்தை
மனங்களில் வாழும் மங்கள ரூபன்
(வலம்புரி)
ஆபோகி மைந்தன் ஆதர வளித்தே
ஆருயி ரனைத்தையும் அன்புடன் காப்போன்
ஆலால சுந்தரன் மீனாள் மகனாம்
ஆதி காவியம் எழுதிய பாலன்
(வலம்புரி)
கி.பாலாஜி
21.10.2020
புதன்
ஐங்கரன் அருள் மாலை - வெண்பா அந்தாதி
வேழ முகத்தோனே வெண்பாவின் நாயகனே
தாழை மடலாலே பூசித்தேன் - தேயுருவே
ஏழைக் கருள்செய்ய நீயும் வருவாயே
வாழ வழிகாட்ட வே.
வேலா யுதனவனின் வெற்றிக்குத் தோள்தந்த
மூலா முழுமுதலே முக்கண்ணன் பாலாநீ
பாவா லுனைநானும் பாடிட வேயருளாய்
காவா யெமையென்றும் நீ.
நீயே துணை யென்றே நம்பித்தான் சோர்ந்தேனே
தாயே யருளென்றே நானும் கரைந்தேனே
சேயேன் செய்வினைதா னேதோ வறியேனே
நாயேன் எனைக்காப்பாய் நீ.
நீயே துணையாவாய் நேயா கணநாதா
ஈயா வரமொன்றும் ஈண்டில்லை - தேவா
மாயோ னரனயனும் போற்றும் மூலாநீ
சேயன் எனைக்காக்கும் தாய்.
தாயா யரவணைக்கும் அன்னையுமே நீயாமே
ஓயா தெனைக்காக்கும் தந்தையுமே நீயாமே
சேயே னென்செயல்கள் யாவும் நினதேநீ
காயைக் கனியாக்கும் கோ.
கி.பாலாஜி
05.11.2020
மாசிலா விநாயகா
ராகம்: கமாஸ்
உமையின் மடியில் அமர்ந் தவா
உலகம் போற்றும் முன் னவா
ஊழ் வினைகள் தனைய கற்றி
உட னிருந்து காக்க வா !
உந்தன் பாதம் வணங்கி னோம்
ஓம் என்னும் பிரணவ மே
உள்நி றைந்த பக்தி யோடு
துதிப் பவர்க்கு எளிய னே
மறைகள் போற்றும் நாயகா
மா சிலா விநா யகா
மந்தி ரங்கள் தேவை யில்லை
மனதில் பக்தி போது மே !
அரச மரத்தின் அடியி லே
அமர்ந் திருந்தே அருள்பு ரி
அன்பு ஒன்றே நிலைப்ப தென்றே
புரிய வைத்த புண்ணி யா
எருக்க மலர்கள் எடுத்து உன்னை
மண்ணில் செய்து அருச் சித்தேன்
ஏற்றம் அருளும் ஒற்றைக்கொம்பன்
ஓங்கு புகழ் வேழ மே!
--கி.பாலாஜி
04.01.2021
பகல் 11.30
ஸ்ரீ வாரணமுக கணபதியே
ராகம்: ஆபோகி / ஹம்ஸத்வனி
ஸ்ரீவாரண முக கணபதியே
சிந்தையில்நின் றென்றும்
அருள்புரி வாயே (ஸ்ரீ வாரண முக)
திருவடி தொழுதேன் திருமகள் மருகா
அருட்கட லாய்வரும் அறுமுகன் தமையா
பெருநிதி யேநீ பேருருக் கொண்டாய்
சிறு உருவானோர் சிற்றெலி அமர்ந்தாய்
உண்மையின் உருவே உன்னடி தொழுதேன்
ஊழித் தாண்டவம் புரிசிவ மைந்தா
உயிரே ஊற்றே உனையன்றி வேறோர்
துணையே தெமக்கும் துணிவருள் மூலா
(ஸ்ரீ வாரண முக)
நீயே கதியென்று நித்தமும் பணிந்தேன்
நின்னருள் ஒன்றே வழியென்றும் அறிந்தேன்
முறைகேட் டருள்செயும் மூலவ னேநீ
முன்வந் தருள்செயத் தாமதம் ஏனோ
(ஸ்ரீ வாரண முக)
கி.பாலாஜி
09.02.2021
காலை 11.30
பாடும் விநாயகனே !
ராகம்: திலங்க்
பாடும் விநாயகனே எம்முள் ளிருந்தே நீர்
பாடும்விநா யகனே !
பாடும் பொருளாய் நீரே அமைய
பாடல் வரிகளில் உம்மருள் பெருக (பாடும்)
ஆடும் விநாயகனே
அகிலம் தழைத்திட அன்பும் பெருகிட
அண்டங்க ளெங்கும் அமைதி நிலைத்திட
ஆடும் விநாயகனே (பாடும்)
பண்ணிசை ஊற்றாய் தோன்றியே என்னுள்
பலவாத் தியங்கள் துணயா யிருக்க
பாட்டின் அடிகள் தானாய் தொடங்க
தொடர்சங் கிலியாய் நிம்மருள் முயங்க
நீரே பாடும் நிலை எனை மயக்க
நிம்மரு ளிசையால் உலகம் இயங்க
நிலைத்த பொருட்கள் இசையால் அசைய
அசையும் பொருட்கள் அசையா திருக்க (பாடும்)
கி.பாலாஜி
08.05.2021
பகல் 12.10
ஐங்கரன் அருள்
ராகம்: ஹிந்தோளம்
ஐங் கரனே அருள் முகனே
அம்புய நாபன் மருமகனே
அறுமுக னின் சோதர னே
ஆதர வேநீ அருள்வா யே !
ஓங் கார ப்ரபு வேநீ
உலகுடை நாதா உமை மகனே
ஒவ்வோ ரணுவிலும் நிறைந்தவ னே
உலகைக் காக்கும் பரம்பொரு ளே!
ஐந்தாம் வேதம் எனும்பா ரதத்தை
அழகாய் எழுத்தில் வடித்தவ னே!
அளவற் றேயருள் பொழிபவ னே
ஆதி மூலனே கணநா தா!
சிற்றெலி தன்னையும் வாகன மாய்
ஏற்றருள் புரிந்தாய் சிவபா லா!
பற்றுக ளெல்லாம் களைந்தே தான்
பரமநின் பாதை காட்டிடு வாய்!
அன்னையும் தந்தையும் உலகெனச் சொல்லிய
அருமறை போற்றிடும் அருளா ளா!
அனுதினம் உன்பதம் தொழுதே வாழ்ந்திட
அருள்புரி வாயே அன்புரு வே!
கி.பாலாஜி
21.10.2021
புதன்
காலை 11.45
கா கணபதியே......
ராகம்:கர்நாடக தேவகாந்தாரி
அறுமுகன் தமையா ஆதார நிலைநீ
அன்பெனும் பொருளால் அகப்படும் நிதிநீ
அல்லல் நீக்கிடு வாய்திரு வருளே
ஆறுதல் உனையன்றி வேறாருளரே (அறுமுகன்)
இல்லவை ஏதும் இலையென்ற நிலையை
ஈந்தனை நீயென் இருநில வாழ்வில்
இன்னும் வேண்டுவ தேதும் உளதோ
இன்னருள் புரிந்தெனைக் காகண பதியே (அறுமுகன்)
உமையவள் பாலா உண்மைப் பொருளே
ஊறுகள் களைவாய் உன் பதம் பணிந்தேன்
பாடும் பணியே பணியாய் கொள்வேன்
பரம நிலைபெறும் வழியீந் தருள்வாய் (அறுமுகன்)
ஒற்றைக் கொம்பனே ஓங்காரப் பொருளே
ஓதி உணர்ந்தோர் போற்றிடும் உருவே
கற்றைச் சடைமுடிச் சிவனின் மகனே
பற்றுகள் எல்லாம் நீக்கிடும் பரனே (அறுமுகன்)
—கி.பாலாஜி 02.11.2021
மாலை 6.30
சதுர்த்தியின் நாயகன்
ராகம்: பாகேஸ்ரீ
சங்கடங்கள் தீர்க்கும் சதுர்த்தியின் நாயகன்
பொங்குமா கடலாய்அருள் தந்தெமைக் காப்பவன்
(சங்கடங்கள்)
எங்குமே நிறைந்தவன் ஏறமர் தாய்மகன்
அன்பிலே கரைபவன் ஆதர வானவன்
வானவர் மானவர் அனைவரும் போற்றிடும்
ஆனை முகத்தவன் ஐங்கர விநாயகன்
(சங்கடங்கள்)
ஓமெனும் ப்ரணவத்தில் உறைந்திடும் நாயகன்
ஒற்றைக் கொம்பா லேசமர் புரிந்தவன்
ஆனை முகத்துடை அசுரனை அழித்தவன்
அன்புடன் துதிப்போர்க்கு அவனோர் எளியவன்
அஞ்சுதல் அனைத்தையும் நீக்கியே அருள்பவன்
அகிலத்தை யேயவன் அன்பாய் ஆள்பவன்
ஆதியாம் சிவனுமை அருளிய தலைமகன்
அனுதின மும்நாம் வணங்கிடும் திருமகன்
(சங்கடங்கள்)
–கி.பாலாஜி 10.11.2021
பகல் 12.15
தோள் கொடுக்கும் தோழன்
தோள் கொடுக்கும் தோழன் அவன்
தோன்றிடுவான் எதிரினிலே
தொந்திக் கணபதியென்
துணை நின்றே காத்திடுவான்!
அன்பாய் அவனிடம் நான்
அனைத்தும் பகிர்ந்திடுவேன்
அல்லவை கள்விலக்கி
நல்லவைகள் தமையீவான்!
என்பும் சதையுமாயென்
னெதிரினிலே அவன் நிற்பான்
என்மன தில்தோன்றும்
இன்பத்தையும் சொல்லிடுவேன்!
எல்லாமே அவன் கேட்பான்
எனக்காதர வாய் நிற்பான்
அன்பாய் அவனுரைக்கும்
நாதமொழி நான் கேட்பேன்!
காக்கும் தேவனவன்
கலிதீர்க்கும் நாதனவன்
கனிவோடே நன்மொழிகள்
நவிலும்ஓர் நண்பனவன்
கண்கள் போலென்னைக்
காத்தே நிற்கின்றான்
கணபதியின் தாள்களையே
சரணெனவே பற்றிடுவேன்!
கி.பாலாஜி
10.11.2021
பகல் 1 மணி
ஐம்முக தேவன் ராகம்: குந்தலவராளி
(பெங்களூர் ஹொரமாவு என்ற இடத்தில் உள்ள
பஞ்சமுக விநாயகர் மேல் எழுதியது)
ஓரைந்து முகமும் ஈரைந்து கரமும்
ஒன்றாய் அமைந்த பேருருவே
ஓமெனும் ப்ரணவம் தனையே பொருளாய்
கொண்டே நின்றாய் எழில்உருவே (ஓரைந்து)
அன்னையும் தந்தையும் தானே உலகம்
என்றே உணர்த்திய திருமகனே
அறுமுக னவனின் ஆசைக்குத் துணையாய்
நின்றே உதவிய நாயகனே
தேவர் முதலாய் மாந்தர் ஈறாய்
யாவரும் போற்றும் கரிமுகனே
தேறுதல் சொல்லும் தேனே அமுதே
அழகே அரியின் மருமகனே (ஓரைந்து)
இருளை விலக்கி ஒளியைப் பெருக்கி
இகபர சுகங்களை ஈவோனே
மருளை நீக்கி மாயைகள் அகற்றி
மதியில் என்றும் நிறைவோனே
அறுகம் புல்போதும் அருச்சிப் பதற்கே
ஆறுத லாயுனைக் கொள்வதற் கே
அருள் மழை பொழிந்தே காப்பதற் கேநீ
அன்போ டணைத்தே சேர்ப்பதற் கே (ஓரைந்து)
கி.பாலாஜி
23.11.2021
காலை 10.30
கற்பக விநாயகனே
ராகம் : திலங்க்
கற்பக விநாயகனே கரமைந் துடையானே
கமலக் கண்திறந்தே கருணைபுரிவாயே !
(கற்பக)
அன்னை தந்தைதான் அகிலத்தில் முதல் தெய்வம்
என்பதை எளிதாக உணர்ந்திடச் செய்தாயே
ஆறுதல் உன்பதமே இன்னிசை உறைவோனே
ஈவாய் கலையெல்லாம் இகபர சுகமும்தான் !
(கற்பக)
தும்பிக்கை யதனில் தோதாய் கொழுக்கட்டை
தன்னை எடுத்தவனே தாரணி காப்பவனே
தவறுகள் செய்திருப்போம் தாயாய் நீ பொறுப்பாய்
தண்மையின் உறைவிடமே தருநிழல் தருபவனே
(கற்பக)
காலத்தின் பிடிதன்னில் அகப்பட் டலைகின்றோம்
காலமே நீயன்றோ கருணை புரிவாயே
காரியமும் நீயே காரணப் பொருள்நீயே
காவலும் நீயன்றோ கணபதி அருள்வாயே !
(கற்பக)
கி.பாலாஜி
01.01.2022
காலை 9.30
முக்குறுணி விநாயகனே
https://youtu.be/Usw9M59wtXg
(Sung by K.Balaji)
முக்குறுணி விநாயகனே
மூலமுதற் பொருளே
முந்திவந்தென் வினைகளெல்லாம்
முழுதும் தீர்ப்பவனே
(முக்குறுணி)
ஆதிகா வியம்தன்னை
எழுதி அருள்செய்தாய்
அன்னையுமை தந்தைசிவன்
தானேமுதல் தெய்வம் என்றாய்
ஆலமரத் தடியமர்ந்தே
அன்பு கொண்டு வலம்வந்தோர்
அத்தனை பேருக்கும்நீ
ஆதரவு தருவயே !
(முக்குறுணி)
நான் மாடக் கூடலிலே
நலமருளும் மீனாக்ஷி
அம்மைதிருக் கோயிலிலே
அகவாயில் தனிலமர்ந்தே
காணவரும் பக்தருக்குக்
காட்சி தருகின்றாய்
கனவிலும் நினையாத
வரங்கள் நீ அருள்கின்றாய்
(முக்குறுணி)
எண்ணங்கள் வருமுன்பே
எழுத்தாய்நீ நிற்கின்றாய்
ஏடுகள்தனை நிரப்பி
நீயே பாடுகின்றாய்
என்றென்றும் உன்பாதம்
மறவா திருந்திடவே
ஏழைக் கருள்செய்வாய்
எலிவா கனத்தோனே !
(முக்குறுணி)
கி.பாலாஜி
30.01.2022
பகல் 2 மணி
கணநாதனே... ராகம்: செஞ்சுருட்டி
Sung by : K.Balaji
https://youtu.be/JmZosWfbQ1s
கணநாதனே குணசீலனே
நிஜபோதனே நிமலனே
புவிநாயகா பூபாலகா
அருள் வேதனே அழகனே
(கண)
இமைப்போதிலே இகமீதிலே
நிகழ்யாவையும் நிறுவுவாய்
இறுமாப்பிலே அலைமாந்தரை
சரிசெய்து நீ அருளுவாய்
(கண)
வாழ்வில் தேடிவரும் இன்பதுன்பங்கள்
யாவும் உந்தனருள் செல்வமே
வாசல் நாடிவரும் அன்பர் நாங்களுந்தன்
அன்பில் குளிர்ந்து பதம் பணிவமே !
(கண)
கி.பாலாஜி
11.03.2022
காலை 11.30
வலஞ்சுழியோன் துணை
ராகம் ; ஹம்ஸத்வனி
குழந்தை மனமுடைய செழுங்கன்றே
கோதொன்றும் இல்லாத குணக்குன்றே
தீதொன்றும் சூழாமல் துணைநின்றே
போதென்றும் காப்பாயே பூ பாலா
(குழந்தை)
வாதும் சூதுமெலாம் எனை அணுகா
வழியைக் காட்டிடுவாய் வலஞ்சுழியோய்
வாழ்வின் பாதையிலே நீ என்றும்
வழித் துணை யாய்நின்றே நலமீவாய்
(குழந்தை)
போதும் எனும்மனமே பொன்னாகும்
போதா திருப்பது உன் நினைவாகும்
ஏதும் குறைகள் நான் செய்தாலும்
ஏற்றே அருள்புரியும் கணநாதா
(குழந்தை)
எல்லாம் நின்னருளே என்றிருந்தேன்
எங்கும் நிறைகின்றாய் என்றுணர்ந்தேன்
என்றும் மலரடியே மனம் தன்னில்
பொன்றா திருந்திடவே புரிவாயே
(குழந்தை)
கி. பாலாஜி
24.03.2022
காலை 9 மணி
வாரண முகனே ராகம்: ரீதிகௌளை
(Lyrics set to tune and rendered beautifully by Lakshmi 🙏
வரமருள வந்திடாய் வாரண முகனே
வந்தனம் புரிந்தனம் ஸுமுகனே
வரமருள வந்திடாய் வாரண முகனே ...ஸுமுகனே
அறுமுகன் தமையா அற்புதத் திருவே
அவ்வைக் கருளிய கற்பகத் தருவே
ஆதர வென்றும் நின்பத நிழலே
அருளே மருளே அருமறைப் பொருளே
இன்னல்கள் அகற்றிடும் இன்முகத் தோனே
இருநிலம் வாழ்வோர் தமைக்காப் பவனே
ஈவா யெனநாம் கேளா முனமே
ஈந்தெமைப் புரந்திடும் ஈசனின் மகனே....ஸுமுகனே
(வரமருள)
கி.பாலாஜி
19.09.2021
1.30 am
காவிரி அருளிய பெருநிதி
ராகம் : ஆபோகி
கண்மலர் திறப்பாய் கணபதியே
காவிரி அருளிய பெரு நிதியே
காவியம் எழுதிய கலை நிதியே
கற்பகமே துணை திருப்பதமே. (கண்மலர்)
கமலத்தின் இதழமர் கமல கணபதி
கனிக்கோர் நாடகம் ஆடிய கணபதி
கஷ்டங்கள் களைந்திடும் கருணா கணபதி
கருணையின் கடலாய் விளங்கிடும் ஸுரபதி (கண்மலர்)
அரச மரத்தடி அமர்ந்தருள் புரிவாய்
அண்டிய பேருக்கு அனைத்தையும் தருவாய்
ஆலம் விழுதினைப் போல்மனம் ஊன்றி
அருகினைப் போல் மனம் இறுகிட வைப்பாய்
வித்தைகள் அருளும் வித்யா கணபதி
வீரத்தை அளிக்கும் வீரகணபதி
விநயத்தை அருள்வாய் விநய கணபதி
விந்தைகள் புரிந்திடும் வினோத கணபதி. (கண்மலர்)
கி.பாலாஜி
30.08.2022
பகல் 12.30
அவ்வைக்கருளிய....
ராகம்: ஹம்ஸத்வனி
அவ்வைக் கருளிய அருமறைப் பொருளே
அகிலம் காத்திடும் அழகின் உருவே
ஆதர வென்றும் நீயே திருவே
அன்புடன் பணிந்தோம் முழுமையின் முதலே
(அவ்வை)
இகபர சுகம் தரும் ஈசன் மகனே
இன்னுயிர் காக்கும் இனிமையின் தருவே
ஈயும் வரங்கள் எவையும் நலமே
எருக்கின் மலருக்கும் ஏற்றம்தந் தவனே
பாவாய் பண்ணாய்
பலனாய் ஆனாய்
பணிவோர் வாழ்வின்
பொருளாய் ஆனாய்
மூவாப் பொருளே
முதலே முடிவே
மூவரும் தேவரும்
போற்றும் வடிவே
(அவ்வை)
கரிமுகனேயுன்
கரமொன் றொடித்தாய்
காவியம் எழுதிக்
காசினிக் களித்தாய்
அறுமுகன் தமையா
ஆதர வளிப்பாய்
அருமலர் பதம்பணி
வோர்குறை பொறுப்பாய்
(அவ்வை)
கி. பாலாஜி
20.09.2023
பகல் 1 மணி
ஆனை முகத்தவா !
(ஹரிவராஸனம் மெட்டில்)
ஆனை முகத்தவா
அருளைப் பொழிபவா
அன்பினால் எமை
ஆளு கின்றவா
இமைகள் சோர்ந்திடா
தென்றும் உன்னையே
இதயம் தன்னிலே
காண வைப்பவா !
மோதக ப்ரியா
முழுமை யானவா
முழுமை தன்னிலே
மூல மானவா
முந்தி வந்துனைப்
போற்றிப் பாடவே
மூகன் எனக்குமே
மொழியைத் தந்தவா !
ஷண் முகப்ரியா
சங்கரன் ஸுதா
சந்திரன் ஸதா
வேண்டும் ஆதவா
வேத நாயகா
பாதம் போற்றினோம்
பாரம் நின்பதம்
ஏற்ற ருள்புரி !
அரச மரத்தடி
அமர்ந் தருள்புரி
ஐங்கரன் உனை
அண்டி வந்தனம்
அன்புளம் கொண்டே
ஆதரிப் பவா
அருள்வி நாயகா
மருளை நீக்க வா !
கி. பாலாஜி
18.09.2023
இரவு 10.45
கரிமுகத்தோனே...
ராகம்: ஸ்ரீ ரஞ்ஜனி
கரிமுகத்தோனே கணபதியே
கண்மலர் சற்றே திறப்பாயே
கருணை மழையைப்
பொழிவாயே
காசினி தனைநீ காப்பாயே
(கரி)
ஞாலம் பெற்றோர்
தாமெனச் சொல்லி
ஞானப் பழத்தை
வென்றோனே
நாவல் பழம்கொண்டு
ஞானம் அவ்வைக்கு
அருளிய குமரனின்
தமையோனே
(கரி)
சதுர்த்தியில் விரதம்
இருந்தே உன்னைத்
தொழுவோர் குறைகளைத்
தீர்ப்போனே
ஸாமவேத
ப்ரியனாம் அந்த
சாம்பசிவன் உமை
மைந்தோனே
ஸங்கட மெல்லாம்
தீர்த்தே அந்தத்
திங்களுக் கருளிய
பெருமானே
எங்கணும் ப்ரணவ
மந்திரத் தொலியாய்
நிறைந்தே நிலவும்
நிமலோனே
(கரி)
கி.பாலாஜி
18.09.2023
விநாயக சதுர்த்தி தினம்
வரும் தலைமுறை சிறக்கவே.....
ராகம்: யமுனா கல்யாணி
வாஞ்சையுடன் கூப்பிட்டேன் வருக வருகவே
வரசித்தி விநாயகா வருக வருகவே
மனமுழுதும் நிறைந்து உன்னை வரவேற் கின்றேன்
மதிகுளிர்ந்தே வரமருள வருக வருகவே
(வாஞ்சையுடன்)
இயன்ற மட்டும் பூசனைகள் செய்துனை வணங்கி
ஈவாயென வரம் வேண்டிக் காத்துநிற் கின்றேன்
வழக்கமான வழிமுறைகள் மாறிய போதும்
குறைவின்றக் கும்பிடுவேன் குணநிதியே வா
(வாஞ்சையுடன்)
குலவிளக்கே குறுமுனியின் கமண்டலத்திலே
அடக்கி வைத்த காவிரியை அவிழ்த்துவிட்டனை
குடகுமலை தனிலிருந்தே வழியில் வளங்களை
வாரித்தந்து வளம்பெருக்கி ஓடச் செய்தனை
(வாஞ்சையுடன்)
வந்தனைகள் செய்து உன்னை வாழ்த்திப் பாடினேன்
வஞ்சனைகள் இல்லைமனதில் வருந்திக் கூப்பிட்டேன்
வாழவைக்கும் தெய்வமுன்னை வணங்கிப் போற்றினேன்
வரும்தலைமுறை சிறக்கவேநீ வரமருள் வாயே
(வாஞ்சையுடன்)
கி.பாலாஜி
09.09.2021
மாலை 3.30
கணபதி சரணம்....
கமலத் திருவடி சரணம்
கணபதி பாதம் சரணம்
கண்ணுக்கு முன்னே தோன்றும்
காட்சிப் பொருளே சரணம்
எண்ணத்தில் என்றும் நீயே
நிறைவாய் திருவே சரணம்
நின்மல ரடியென்றும் மறவா
திருக்கும் மனமருள் சரணம்
ஒன்றே பலவே சரணம்
ஒன்றுக்குள் ஒன்றே சரணம்
ஒன்றில் என்றும் மனதை
நிலைத்திடச் செய்வாய் சரணம்
என்றும் எங்கும் நிறையும்
ஏகாந்தத்தின் உருவே !
உருவே இல்லா ஒளியே
ஓமெனும் ஓசை ஆனாய் !
ஒன்றுக்கும் உதவாப் பொருளாய்
இருந்தே னுயர்ந்திட வைத்தாய்
சிந்தனை தனிலே நிலைத்தாய்
சீரிய வரங்களை அளித்தாய்
மன்றினில் ஆடும் பெருமான்
உமைதிரு மகனே சரணம்
குன்றினில் ஆடும் குமரன்
கூடப் பிறந்தோய் சரணம் !
உன் பதம் ஒன்றே நினைவாய்
உன்னில் கலந்திட வேண்டும்
உன் அருள் ஒளியில் கலந்தே
ஒருமை உணர்ந்திட வேண்டும்
உனதென தெனவே இல்லா
ஒருமை அறிந்திடல் வேண்டும்
ஓங்காரத்தின் பொருளே
ஓசையின் நயமே அருளாய் !
கி.பாலாஜி 05.10.2023 , காலை 11.15
பால கணேசம்
ராகம்: யமுனாகல்யாணி
க்ஷிப்ர ப்ரஸாத
கணபதி பாதம்
பற்றிட நினைத்தா
லேஅது யோகம்
எப்புற மும்நமை
அணைத்தே நின்றே
அன்புடன் காக்கும்
பால கணேசம்
(க்ஷிப்ர)
சிப்பிக்குள் இருக்கும்
முத்தினைப் போலே
சிந்தையில் நிற்கும்
முத்தா வானவன்
எத்தனை புண்ணியம்
செய்தோம் என்றே
என்றும் மலரடி
பற்றியே வாழ்வோம்
(க்ஷிப்ர)
பண்ணிய பாவம்
அத்தனை யும்மனம்
நண்ணிய போதே
நலிந்தே போகும்
எண்ணரும் பூசனை
வேண்டாம் பூவொரு
கண்ணியை மனதுடன்
தந்தால் போதும்
(க்ஷிப்ர)
கி. பாலாஜி
12.10.2023
பகல் 3 மணி
ஐங்கரன்…
ராகம்: சாருகேசி
ஐங்கரன் அபயம்
தருகின்றான்
இனி பயம்
இலையென
நவில்கின்றான்
எது வந்த போதிலும்
துணை என்றே
எல்லா நலன்களும்
அருள்கின்றான்
(ஐங்கரன்)
அன்பெனும் பிடியில்
அகப்படும் மலையாய்
அவன் மனம் கனிந்தே
சிரிக்கின்றான்
அவன் நினை வொன்றே
நினைவாய் இருப்போர்
அகமும் புறமும்
உறைகின்றான்
(ஐங்கரன்)
அனைத்தையும் மலரடி
தனிலே மனதொடு
சமர்ப்பித்தாலே
அது போதும்
ஆகும் செயல்கள்
தன்னாலே
அழகாய் நடந்திட
அருள்கின்றான்
இகபர சுகங்களை
ஈந்தே அவனும்
இன்னருள் புரிந்தே
சிரிக்கின்றான்
இனியவன் கருணை
மழைதனில் நனைந்தே
வாழ்ந்திட வரங்களை
அருள் கின்றான்
(ஐங்கரன்)
கி.பாலாஜி
18.08.2025
இரவு 11.45
வல்லப கணபதி
ராகம்: ஹம்ஸத்வனி
வந்தனை புரிந்தேன்
வல்லப கணபதி
வரமருள் கணபதி
வாதாபி கணபதி
(வந்தனை)
செந்திரு மருகா
சிவனுமை பாலா
சேவடி சரணென்
றவர்க்கருள் சீலா
வீசிடு துதிக்கையில்
மோதகம் வைத்தேன்
வினைகள் தீர்த்தருள்
வேலவன் தமையா
அருகம் புல்லெடுத்
தருச்ச்சித் தோர்க் கருள்
அரச மரத்தடி
அமர்ந்திடும் அழகா
ஆலய முகப்பை
அலங்கரிப் போனே
அன்பெனும் பிடியுள்
அகப்படு வோனே
சிந்தையைச்
சீராக் கிடும்
சித்தி நாதா
சீதக் களபச்
செந்தா மரையமர்,
வேதங்க ளனைத்தின்
வித்தா னவனே
வேத வியாசரின்
துணையா னவனே
ஒற்றைக் கொம்பினை
உடைத்தோர் பாரதம்
எழுதிய வேதா
ஏழிசை நாதா
ஓரிள மெருக்கின்
பூவால் மலரும்
உன்னதனே மங்கை
புத்தி மணாளா
காக்கையின் உருவில்
வந்தே கமண்டல
நீரைக் கவிழ்த்தே
காவிரி தந்தோய்
கரிமுகத் தோனே
கஜமுக னென்னும்
அசுரனை வென்றாய்
ஆதிவி நாயகா
அரங்கனும் அரங்கத்
திருத்தலத் தமர
அருந்துணை புரிந்தோய்
அன்பெனும் மலையே
ஓமெனும் மந்திரத்
துள்ளுறை வோனே
ஓதி உணர்ந்திடத்
திருவருள் புரிவாய் !
கி.பாலாஜி
21.02.2024
காலை 8.30
மாதங்கி ஸுதனே...
ராகம்: பாகேஸ்ரீ
மலரடி பணிந்தேன்
மங்களகரனே
மாமுனிவோர் தொழும்
மாதங்கி ஸுதனே
சிந்தை குளிர்வாய்
ஸங்கட ஹரனே
சீர்மிகு தேவரும்
பணி ஸுந் தரனே
வந்தனை புரிவோர்
வாழ்வினில் என்றும்
சிந்தை கலங்கா
திருந்திட வைப்பாய்
செங்கமலத் திரு
மால்மருகோனே
எங்கணும் மங்களம்
தங்கிட வைப்பாய்
அரச மரத்தடியில்
அமர்ந்தருள் ஸுமுகா
அல்லும் பகலும்
தொழுதேன் நீ கா
நால்வே தங்களின்
நாதா வா வா
நன்மையின் உருவே
நலமே தா தா
அஞ்சுத லகற்றும்
ஆருயிரே வா
கொஞ்சிடு குகன்துணை
நின்றோனே வா
செஞ்சடை நாதன்
சிவன் மகனே வா
வெஞ்சமர் புரிந்தே
களைகளைந்
தோய் வா
கி.பாலாஜி
25.06.2024
இரவு 7.30
ஸங்கடஹர
சதுர்த்தி தினம்
கணபதி நீ துணை
ராகம்: பாகேஸ்ரீ
கணபதி நீ துணை
கண் மலர்வாயே
காரியங்கள் வெற்றி
பெற அருள்வாயே
(கணபதி)
எண்ணித் துணிக
கருமம் என்பார்
உனையே எண்ணித்
துவங்குகின் றேன் நான்
தொல்லைகள் அகற்றித்
துணை இருப்பாயே
தும்பையில் மாலை
தொடுத்துனைத் தொழுதேன்
(கணபதி)
தேவர்க்கும் மூவர்க்கும்
யாவர்க்கும் முதலே
முழுமைப் பொருளே
முழுமையின் முழுதே
வேதங்கள் போற்றித்
துதிக்கும் விழுதே
வித்தையும் விருதுமுன்
திருவருளாலே
கி.பாலாஜி
16.07.2024
இரவு 7.55
மங்கள மூர்த்தி
ராகம்: ஹம்ஸத்வனி
கணபதியே உனைக்
கை தொழுதேன்
காலமெல்லாம் உன்னைப்
பாடிடும் வரம் தா
(கணபதியே)
மரத்தடி அமர்ந்திடும்
மங்கள மூர்த்தி
மனதிற்கு அமைதியைத்
தருவதுன் கீர்த்தி
மோதகப் பிரியனே
ஒரைங்கரனே - நான்
பாதகம் புரியாது
அருள் சிவ சுதனே
பஞ்சமஸ்வரத்தில்
பாடிடும் ஆசை
பரமே எனக்கிலை
பதம் பணிந்தேனே
மனதுக்குள்
இசைத்தே
மகிழ்ந்தால் போதும்
மங்கலமாய் வரி
தந்தருள்வாயே
(கணபதியே)
சித்திகள் அருளும்
சிவசக்தி மைந்தா
சிந்தையில் நிறைந்தாய்
விந்தைகள் புரிந்தாய்
எந்தையும் தாயும்
நீயே ஆனாய்
சிந்தாமணியே
சிரம்தாழ்த் தினனே
(கணபதியே)
கி.பாலாஜி
19.07.2024
காலை 10.15
கரிமுகனே கணபதி தேவா...
ராகம்: மோஹனம்
கரிமுகனே எம்
கணபதி தேவா
கழல் நிழல் தருவாய்
பதம் பணிந்தேன்
கண் மலரசைவால்
ககனமும் புவியும்
ஆளும் அரசே
அடி பணிந்தேன்
(கரிமுகனே)
அன்புடன் எருக்கின்
மலரெடுத்துன்னை
அர்ச்சித்தாலும்
அருள் புரிவோனே
அரசமரத்தின்
அடியினில் அமர்ந்து
அருகணை வோர்க்குத்
துணையா குவனே
(கரிமுகனே)
காரியத் தடைகள்
யாவையும் விலக்கி
கருணை புரியும்
கற்பகத் தருவே
கண்ணின் மணியுனை
என்றும் மறவா
வரத்தை அருள்வாய்
வலம்புரி நாதா
எழுதும் பாடல்
யாவுக்கும் நீயே
அடியெடுத்
தருள்வாய்
அன்பின் தருவே
நல்லிசை யாயும்
நீயே ஆவாய்
நாதத்தின் உருவே
நற்கனியே
(கரிமுகனே)
கி.பாலாஜி
06.09.2024
பகல் 12 மணி
விக்னராஜன்
ராகம்: கம்பீர நாட்டை
விநாயகனே விக்னராஜா
வேழ முகத்தோய்
வினை தீர்த்திடுவோய்
விநாயகனே விக்னராஜா
(விநாயகனே)
தேவ கணங்களின் தலைமகன் நீயே
தேடி வருவோர் துணையா குவனே
நாடி உன்னைத் துதிப்போர்க்கெல்லா
நலங்களும் அருளும் நல்லெழிலே
பதமலர் பணிந்துனைப் பாடிட நினைத்தால்
பதங்களை அள்ளித் தரும் கணபதியே
பாடவும் நீயே துணை நின்றிடுவாய்
பங்கய மலர் மகள் நற்றிருமருகா
(விநாயகனே)
அரங்கத்தில் அரங்கன் அமர்ந்திட நீயே
அருந்துணை புரிந்தாய் அறுமுகன் தமையா
அரச மரத்தடி தனிலே அமர்ந்தே
அண்டி வருவோர் குறை தீர்ப்பவனே
(விநாயகனே)
கி. பாலாஜி
08.09.2024
பகல் 2 மணி
கற்பக விநாயகனே...
ராகம்: பாகேஸ்ரீ
கற்பக விநாயகனே கருணா ஸாகரனே
கற்பூர ஒளியினிலே கனலாய் மிளிர்பவனே
(கற்பூர)
பொற்பதம் பணிந்தோர்க்கு நற்பதம் அருள்வாயே
போற்றிப் பாடிடவே நல் வரம் தருவாயே
விற்புருவம் கொண்ட வேல்முருகன் தமையா
பொற்புடை தேவே என் கற்பகத் தருவே கா
(கற்பூர)
கண்ணொளி இழந்தே நான் கவையாய் திரிந்தேனே
மின்னொளியென வந்தே என் முன்னேநீ நின்றாயே
பொன்னிகராம் தமிழில் சொல்மாரி பெய்தாயே
புன்னகை ஒன்றாலே என் மனம் நின்றாயே
அன்புடனே எந்தன் அகம் நீ புகுந்தாயே
பண்புளதாய் மனதை மாற்றித் தந்தாயே
செம்புலம் பெய்நீரைப் போலென் னகத்தோடு
கலந்தே நின்றாயே காவல் தந்தாயே
(கற்பூர)
கி.பாலாஜி
09.09.2024
இரவு 8.15
கணபதியே குருவே
ராகம்: நாட்டை
கணபதியே குருவே
சரணம்
குரு துதி புரியும்
கணபதி சரணம்
கணங்களின் தலைவா
சரணம் சரணம்
மங்களம் அருள் குரு
மலர்ப்பதம் சரணம்
(கணபதியே)
கணபதி அருள் பெற
குரு வழித்துணையே
குருவருள் கிடைத்திட
கணபதி துணையே
ஒன்றுக்குள் ஒன்றாய்
கலந்தருள் புரிவீர்
ஒன்றும் மற்றதும்
புரிந்திட வைப்பீர்
(கணபதியே)
ஓம் எனும் ப்ரணவத்தில்
உறைந்திடும் கணபதி
ஓம் எனும் மந்திரம்
உரைசெய் குரு பதி
காலமும் கணபதி
பதம் ஒன்றே கதி
பரகதி அடைந்திட
குரு பதமே கதி
(கணபதியே)
கி.பாலாஜி
14.07.2024
இரவு 11.15
பால கணபதி...
ராகம்: ஆபோகி
பாலகணபதி
பணிகிறோம்
பரசிவன் மகனே
பணிகிறோம்
(பால)
ஓமெனும் ப்ரணவத்தில்
ஒன்றாய் நிலைத்து
உயிர்களைக் காக்கும்
பரம் பொருளே
உன் பதம் ஒன்றே
மனதில் நினைத்து
ஒருமுகமாய் உன்னை
வழிபடும் வரம் தா
(பால)
பழம்பொறி வெல்லம்
அவலுடன் மோதகம்
வைத்துன் பதங்களில்
படைக்கிறோம்
அனைத்தும் ஈந்தெமைக்
காக்கும் பரமே
அன்புடன் ஏற்றெமக்
கருள்புரி
அரச மரத்தடி
தனிலே அமர்ந்து
அருளை மழையாய்
பொழிபவனே
அன்பின் மலையே
அறிவின் நிதியே
அகம் நிறை திருவே
வரம் தரவா
கி.பாலாஜி
17.09.2024
இரவு 8.15
பால கணேசன்
ராகம்: ஹம்ஸத்வனி
பால கணேசா பரமேசன் நேசா
பரவித் தொழுவோர்க்கு
அருள் புரி ஈசா
(பால)
பாலகணேச நின்
பதம் போற்றிப் பணிந்தேன்
பாடலுக்கொரு பதத்தை
எடுத்தேதந் தருள்வாய்
பங்கய நாபன்தன்
மருகோனே நீயே
பண்ணொடு ஸ்வரமாகி
வரமீய வாராய்
(பால)
ஸ்ரீலலிதை திருநாமம்
தனிலேழு பாடல்கள்
பாடிட அருள்வாய் நீ
பார்வதி ஸுதனே
பத்ம மலர் எடுத்துப்
பதம் போற்றி உன்னை
அர்ச்சனை கள்செய்து
ஆராதிக் கின்றேன்
(பால)
அறுகம்புல்லுடன்
எருக்கின் மாலை
சார்த்தி வணங்கினேன்
சதுர்த்தி நாயகா
அவல் பொறி வெல்லம்
பழத்துடன் மோதகம்
படைத்துனை வேண்டிப்
பணிந்தே துதித்தேன்
அன்புடன் அருள்வாய்
அறுமுகன் தமையா
அரச மரத்தடி
அமர்ந்தருள் நாதா
அன்னையைப் பணிந்திடப்
பாடல்கள் தந்தே
ஆதரிப்பாய் நீ
அருட்பெரும் கடலே (பால)
கி.பாலாஜி
21.09.2024
மாலை 5 மணி
கணநாதனே
ராகம்: ஸ்ரீ ரஞ்சனி
கணநாதனே குணசீலனே
நிஜபோதனே நிமலனே
(கணநாதனே)
கண்களை மூடியுன்
கழலிணை தொழுதால்
காரியம் யாவும்
நிறைவேறிடுமே
எண்ணுவதெல்லாம்
உன்னருளாலே
ஏற்றங்கள் கண்டே
உயர்ந்திடுமே
(கணநாதனே)
அன்னையின் ஆயிரம்
நாமத்துள் ஏழைத்
தேர்ந்தெடுத்தாரே
அன்புடன் குருவே!
அவற்றை மனதில்
இருத்தியவாறே
அருளிட வேண்டும்
பாடல்கள் ஏழே
அன்புருவேயெம்
கஜமுகனேயுன்
அருளால் இதை நீ
நடத்திடுவாய்
ஆறு முகனின்
தமையா நின் பதம்
தொழுதே பணிந்தேன்
துணை வருவாய்
(கணநாதனே)
கி.பாலாஜி
23.09.2024
12.15 am
மாற்றுரைத்த கணபதி
ராகம்: ஸஹானா
மாற்றுரைத்த கணபதியே
மங்களங்கள் அருள்பவனே
மாதா கமலாம்பாள்
தியாகேச னுடனுறைவோய்
மந்திரங்கள் அறியேன் நான்
மலரடி தனைப்போற்ற !
பொன் வைக்கும் இடத்திலிந்தப்
பூவைத்துப் போற்றுகின்றேன்
(மாற்றுரைத்த)
பெற்றோர்கள் உன் பெருமை
போற்றிச் சொல்லக் கேட்டதுண்டு
தேடிவந்து காண்பதற்கே
திருவருள் அடைந்திலனே
சாட்சியென நின்றவனே
சதுர்த்தியின் நாயகனே
ஸங்கடங்கள் தீர்ப்பவனே
ஸந்ததமுன் பதம் பணிவேன்
(மாற்றுரைத்த)
ஆரூரில் அழகுறவே
அமர்ந்தே அருள் புரிவோய்
அன்பு வடிவானவனே
ஆறாப் பேரமுதே
அடியேன் நின் பெருமை
என்றென்றும் பாடி நிற்க
அருள்புரிய வேணுமய்யா
ஆதி சிவன் உமை மகனே
(மாற்றுரைத்த)
சுந்தரர்க்குப் பொன்னதனின்
மாற்றுரைத்த காரணத்தால்
மாற்றுரைத்த கணபதியாய்
மக்கள் மனம் நிறைந்தவனே
ஆரூரின் கோவிலதன்
மூலைக்கோர் கணபதியாய்
முற்றிலும் நிறைந்தவனே
முழு முதல் நாயகனே
(மாற்றுரைத்த)
கி.பாலாஜி
24.10.2024
காலை 10.45
கண நாயகனே
ராகம்: கம்பீர நாட்டை
பல்லவி:
கண நாயகனே அருள்வாய்
கஜமுகனே
கண நாயகனே அருள்வாய்
அனுபல்லவி:
ஸுரபதியே ஸுமுகனே
ஸுந்தரன் மீனாள் ஸுபுத்ரனே
(கண நாயகனே)
சரணம்:
குருவருளாலே
குணசீலா உனைக்
கும்பிட்டுத் தொழுதிடும்
திருவருள் உடைத்தோம்
மனமெனும் மலர்களுன்
பதங்களில் தூவி
மா தயை புரிந்திட
வேண்டியே துதித்தோம்
(மத்யம காலம்)
மாதவமே அருள்
மந்திர உருவே
மறை நாயகனே
திரு வானவனே
உருவாய் அருவாய்
நிறையும் பொருளே
திருவடி பணிந்தோம்
தருவாய் வரமே
(கண நாயகனே)
கி.பாலாஜி
20.11.2024
மாலை 3.30
பாலகணபதி
ராகம்: சாமா
கனியமுதே பால கணபதியே மனம்
கனிந்தருள் பொழியும் கரிமுகனே
கண்மலர் திறந்திட ககனம் உயிர்த்திட
கருத்துடன் காத்திடும் காவலனே!
(கனியமுதே)
என்மனம் என்றும் நிறைந்திடுவாயே
எதிலும் துணையாய் நின்றிடுவாயே
ஏற்றிடும் செயல்கள் யாவையும் செய்திடத்
திறனளிப் பாயே மாமணியே!
(கனியமுதே)
அம்மையும் அப்பனும் தாமே உலகெனக்
காட்டிய கருணைப் பெருநிதி யே
ஆதியும் அந்தமும் இல்லாச் சிவனுமை
அருமை மகனே ஆருயி ரே!
தும்பிக் கையுடை நம்பியுன் பதமே
நம்பிவந் தோர்மனம் நலம்பெறு மே!
துங்கக் கரிமுகத் தூமணியே புவி
எங்கும் மங்கலம் நிறைந்திடு மே!
(கனியமுதே)
கி.பாலாஜி
22.05.2025
காலை 9.45
பிள்ளையார்
ராகம்: ஹம்ஸத்வனி
ப்ரணவத்தின் பேருருவே
பிள்ளையார் எனும் திருவே
(ப்ரணவத்தின்)
பிள்ளைப் பருவம் முதல் நான் தொழுமோர்
கள்ள வாரணப் பெருமானே
எள்ளத்தனையும் மறவாமல் எந்தன்
கூட இருந்தருள் புரிவோனே
(ப்ரணவத்தின்)
என்ன பிழை நான் புரிந்திருந்தாலும்
ஏற்றருள் புரிகரிமுகத்தோனே
சின்ன எலிதனை வாகனமாய் கொண்ட
சிந்தையில் நிறைமால் மருகோனே
வண்ண மயில்தனி லேறிடும் முருகன்
முன்னவனே முழு முதல்வோனே
எண்ணங்கள் செயல்கள் யாவையு முந்தன்
வண்ண மலர்ப்பதம் வைத்தேனே
(ப்ரணவத்தின்)
கி.பாலாஜி
18.03.2026
மாலை 4.15
புவனேஸ்வரி மைந்தா
ராகம் : காபி
புவனேஸ்வரி மைந்தா
பூரணனே வேந்தா
பூம்பொற் பதம் போற்றிப்
பாடிடும் வரம் தா
(புவனேஸ்வரி)
ஒற்றைக் கொம்புடைத்து
ஒரு காவியம் எழுதி
உலகுக்கருள் செய்தோய்
ஒரு முழு மதிமுகத்தோய்
கரிவதனா நீயே
கருணை பொழிவாயே
கண்மலர் திறப்பாயே
-என்
கலிகள் தீர்ப்பாயே
(புவனேஸ்வரி)
கண்மூடிக் கைகூப்பி
கணமுனை நினைத்தாலே
காரியம் யாவிலுமே
வெற்றியைத் தருவாயே
கருத்துடன் தொழுவோரின்
கவலைகள் தீர்ப்பாயே
கமலத் தமர் தேவி
மருகா நீ காப்பாயே
(புவனேஸ்வரி)
கி.பாலாஜி
02.07.2026
காலை 10.45
.jpg)

Comments
Post a Comment