Posts

வரம் தரும் வாரணன்

 வரம் தருவாய் வாரணனே !  ராகம்:ஹம்ஸத்வனி வரம் தருவாய் வாரணனே! வலம்புரி விநாயகனே - எனக்கொரு                         (வரம்) உலகம் புரந்திடும் உமையாள் மகனே உருவான பிரணவத்தில் உறைபவனே  திருவான வேதங்கள் தொழுதிடும் தேவனே  திருமால் மருகனே திவ்ய சொரூபனே             ‌        (வரம்)   ஆணவம் கன்மம் மாயைகள் அழிப்பாய்  அருட்கடல் தனிலே எமைமூழ் கடிப்பாய்  அன்பெனும் உருவே அருள்தரும் சுடரே  ஆதியும் அந்தமும் இல்லாப் பொருளே          அகம் குழைந்துன் பதம்நினைந்திடும்           கணந்தனில் கண் மலர் மலர்ந்திடும்         அறம் வளர்த்திடும் திறம் கொடுத்திடும்          அழகிய திருக்கரம் அனைத் தெடுத்திடும்        (வரம்) கி.பாலாஜி 1999

கணபதி கானங்கள்

Image
01 க்ஷிப்ரப்ரஸாத கணபதி             ராகம் : ஆபோகி க்ஷிப்ரப்ரஸாத கணபதி தினம் பணிந்தேன் உந்தன் திருவடி திருவிழி மலர்கள் திறந்திட இன்னும் தாமதமேனோ அருள்புரி........(க்ஷிப்ர) ஓமெனும் ப்ரணவத்துள் உறைபவனே உயிரினம் தழைத்திட ஒளி தருபவனே கரிமுகவதனா கருணாநிதியே கந்தனின் தமையா கலியுகபதியே ....(க்ஷிப்ர) ஈரேழுலகும் இசைவடிவாக இன்னிசைதனிலே நீயுருவாக நர்த்தனமாடி நல்லவை சேர்க்க நாட்டிய கணபதி தாள் பணிந்தேனே ....(க்ஷிப்ர) 02 வரம் தருவாய் வாரணனே !             (ராகம்:ஹம்ஸத்வனி) வரம் தருவாய் வாரணனே!              வலம்புரி விநாயகனே - எனக்கொரு     (வரம்) உலகம் புரந்திடும் உமையாள் மகனே உருவான பிரணவத்தில் உறைபவனே  திருவான வேதங்கள் தொழுதிடும் தேவனே  திருமால் மருகனே திவ்ய சொரூபனே  (வரம்)   ஆணவம் கன்மம் மாயைகள் அழிப்பாய்  அருட்கடல் தனிலே எமைமூழ் கடிப்பாய்  அன்பெனும் உருவே அருள்தரும் சுடரே  ஆதியும் அந்தமும் இல்லாப் பொருளே           அகம் குழைந்து...